வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:மத்திய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை, தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
* இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலர் விருத்தகிரி:
ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும். இயற்கை உரங்களை ஊக்குவிக்க பி.எம்., பிரணாம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்கு தனி நிறுவனம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் அதிகம் விளையும் தமிழகத்திலும், சிறுதானிய ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.
![]()
|
* தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன்:
மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க, 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் அனைத்து கிராமங்களிலும், கூட்டுறவு கடன் சங்கங்களை உருவாக்குவோம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கப்படும் உதவித்தொகையை, 9,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.