வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:
கே.ராமன், சிவகங்கையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: கல்வியில் சிறந்தவர்களை கற்றோர்பலரும் விரும்புவர். அதேபோல, அரசியலில் பண்பு காத்து வரும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்.,'பாஸ்' செய்து, காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் என்பதை பலரும் அறிவர்.
ஆனால், அவர் சிறந்த தொழிற்கல்வி பட்டதாரி என்பதும், கோவையில் இயங்கும் புகழ் பெற்ற கல்லுாரியில், 2002 முதல், 2007 வரை, 'சேண்ட்விச் மெக்கானிக்கல் ஜெனோகிரெட்ஸ்' என்ற, தொழில்நுட்ப கல்வி பயின்று தேறியவர் என்பதை அறியும் போது, அவர் மீதான மதிப்பு அதிகரிக்கிறது. அவரிடம் எளிமையும், அடக்கமும் மேலோங்கி காணப்படுகிறது.
![]()
|
தன் தாய், தந்தையை மதித்து வாழும் அதே பண்புடன், கல்லுாரியில் தனக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள் மற்றும் முதல்வரையும்,அவர் பெருமையாக பேசுவது சிறப்பு. அத்துடன், தன் மனைவி பற்றியும், அவர் பெருமையாக பேசி வருவது, அனைவரையும் மனம் நெகிழச் செய்கிறது. அரசியல் என்றால் வேறு அர்த்தம் கொண்டு இருந்தவர்கள், தற்போது, அண்ணாமலையை பெருமையுடன் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் உருவாகியுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர், 'அனைத்து மக்களும் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்' என்றார். தற்போது அவர் இருந்திருந்தால், 'அனைத்து மாணவர்களும் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்' என்று கூறியிருப்பார்.
'தாய்க்கு பின் தாரம்' என, முன்னோர் குறிப்பிட்டு உள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், தன் வெற்றிக்கு பின்னால், தன் மனைவி இருக்கிறார் என்ற உண்மையை, அண்ணாமலை உலகறியச் செய்துள்ளார். 'இனி, இவர் தான் நம்மவர்' என, எல்லாரும் விரும்பும் அரசியல் பண்பாளராக உலா வரும் அண்ணாமலையின் அரசியல் பணி சிறக்க, ஒவ்வொருவரும் வாழ்த்த வேண்டும்.
Advertisement