வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை துறைமுகத்தில், ஒரே நாளில் அதிகளவு 'ஸ்டீல் காயில்' இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளனர்.
சென்னை துறைமுகத்தில், கடந்த ஜன., 31ம் தேதி, 'எம்.வி.லக்கி சோர்ஸ்' கப்பலில் இருந்து வந்த, 14,993 டன் ஸ்டீல் காயிலை ஒரே நாளில் இறக்குமதி செய்துள்ளனர்.
இதற்கு முன், 2022ல் மார்ச் 13ம் தேதி 13,879 டன் இறக்குமதி செய்ததே சாதனையாக இருந்தது.
இதுகுறித்து, துறைமுக தலைவர் சுனில்பாலிவால் சம்பந்தப்பட்டோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.