வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வளரும் நாடாக உள்ள நிலையிலும், இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் உற்றுக் கவனிப்பதாக தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கவர்னர் ரவி இன்று(பிப்.,02) கலந்துரையாடினார். அப்போது கவர்னர் ரவி பேசியதாவது: உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக பார்க்கின்றனர்.

வளரும் நாடாக உள்ள நிலையிலும், இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் உற்றுக் கவனிக்கின்றன. வாழ்க்கையில் முடியாதது ஏதுவும் இல்லை. சவால்களை எதிர்கொள்ள தயங்கக் கூடாது.
சவால்களை சந்தித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். 2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும். இதனை நோக்கி தான் இந்தியா பயணம் செய்கிறது. பெரிய அளவில் கனவு காணுங்கள். நீங்கள் தொடர்ந்து பயணம் செய்தால் யாராலும் உங்களை தடுக்க முடியாது.
உலகில் உள்ள அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு பெருமைக்குரியது. தமிழகத்தில் 4 லட்சம் தேசிய மாணவர் படையினர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.