சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி ஒரு கி.மீ., தூரத்திற்கு குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என 2021ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமீபத்தில் தமிழ்நாடு கனிம வள விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு காப்புக்காடுகள் நீக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மாற்றத்துக்கான இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மார்ச் 2க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.