சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 238 பூத்களிலும், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெயரே இல்லாத போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர். இதை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்.
பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு வகையான முறைகேடுகளையும் செய்து விதிகளை காலில்போட்டு மிதித்து, ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை ஆளும் திமுக.,வினர் செய்து வருவதாக புகார் கூறினோம்.
எந்த நிலையிலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதற்குள் செல்லக்கூடாது.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டி என்பது பொது மக்களுக்கு தெரியும். அவரை சார்ந்தவர்களுக்கும் தெரியும். அது ஒரு மண்குதிரை, அதை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அது மண்குதிரை அது கரை சேராது.
ஈரோடு கிழக்கில் பா.ஜ., வேட்பாளரை நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளரை திரும்ப பெற மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.