புதுடில்லி: லோக்சபாவில் மத்திய விமான போக்குவரத்துதுறை இணையமைச்சர் வி.கே. சிங் அளித்த பதில்: உதான் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல் படை தளத்தில் இருந்து விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து சென்னையை இணைக்க கூடிய வகையில் விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி 2 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு விமான நிறுவனம், விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.