வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார்.

பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் அவர் அளித்த விளக்கம்: சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு, 21வது சட்ட ஆணையத்திடம் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பொது சிவில் சட்டம் குறித்து 21-வது சட்ட ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்னே அதன் பதவிக்கால முடிவடைந்து விட்டது.
பொது சிவில் சட்டம் குறித்து 22-வது சட்ட ஆணையம் முடிவெடுக்கலாம். எனவே, ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.