வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தனது கையெழுத்தை அங்கீகரிக்க கோரி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனு, இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை. எனவே இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார். இவ்வாறு தேர்தல் ஆணையம் பதில் மனுவில் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிட முடியாது.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது, தேர்தல் நடத்துவது, கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி .தேர்தல் ஆணையத்துக்கு கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என தேர்தல் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவரின் கையெழுத்திட்ட வேட்பு மனுவையே ஏற்க முடியும் என தெரிவித்துள்ளது. வழக்கில் நிலுவையில் உள்ளதால் கடந்த ஜூலையில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தை கருத்தில் கொள்ளவில்லை
புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தனது கையெழுத்தை அங்கீகரிக்க கோரி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement