வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2019-ம் ஆண்டு வரை பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு குறித்து,ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் விவரம் வருமாறு:
கடந்த 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் 21 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கான மொத்த செலவு ரூ.22 கோடியே 76 லட்சத்து, 76 ஆயிரத்து 934. தவிர முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எட்டு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
![]()
|
இதன் மொத்த செலவு, ரூ. 6 கோடியே, 24 லட்சத்து 31 ஆயிரத்து 424. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 86 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மொத்த செலவு, ரூ. 20 கோடியே 87 லட்சத்து, 1475. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.