'தாத்தா'க்களை வில்லன்களாக்கும் உலக சினிமா..! காரணம் என்ன?

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 02, 2023 | |
Advertisement
நெட்ஃபிளிக்ஸ் பிரியர்களை சமீப நாட்களில் அதிகமாகக் கவர்ந்த வெப் சீரீஸ் என்றால் அது 'ஸ்குவிட் கேம்'தான். உலகம் முழுக்க உள்ள நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ஹாரர் கலந்த டிராமா சீரீஸ் காண்போரை கதிகலங்கச் செய்யும். சீரீஸ் முழுக்க ரத்தக்களறி காட்சிகள் கொண்டிருந்தாலும் அடித்தட்டு மக்கள் மீதான முதலாளித்துவத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை
squid game, world cinema, ஸ்குவிட் கேம், முதிய வில்லன்கள்

நெட்ஃபிளிக்ஸ் பிரியர்களை சமீப நாட்களில் அதிகமாகக் கவர்ந்த வெப் சீரீஸ் என்றால் அது 'ஸ்குவிட் கேம்'தான். உலகம் முழுக்க உள்ள நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ஹாரர் கலந்த டிராமா சீரீஸ் காண்போரை கதிகலங்கச் செய்யும். சீரீஸ் முழுக்க ரத்தக்களறி காட்சிகள் கொண்டிருந்தாலும் அடித்தட்டு மக்கள் மீதான முதலாளித்துவத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை உணர்த்தியது இந்த வெப் சீரீஸ்.

'பச்சை-னா சென்றிடு....சிவப்புன்னா நின்றிடு...!'

என்று பத்து வயது சிறுமி குரலில் குழந்தைகள் விளையாடும் 'ரெட் லைட், கிரீன் லைட்' என்கிற விளையாட்டு துவங்கும். போட்டியின் விதிகளைப் பின்பற்றாதவர்கள் திடீரென எதிர்பாராவிதமாக மறைந்துள்ள ஸ்னைப்பர்கள் மூலம் சரமாரியாக சுட்டுக்கொல்லப்படுவர். பாரதத்தின் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவூட்டும் இந்த காட்சி ரசிகர்களுக்கு திகிலூட்டும். இதில் அனைத்து போட்டியாளர்களும் நடுங்கியபடியே இலக்குக் கோட்டை நோக்கி நின்று நின்று ஓடிக்கொண்டிருக்க, ஒரு தாத்தா மட்டும் உதட்டில் புன்சிரிப்புடன் போட்டியை ரசித்த வண்ணம் ஓடி இலக்கை அடைவார்.

அடுத்தடுத்து வரும் உயிரைப் பறிக்கும் கொடூர விளையாட்டுகளிலும் தனது அனுபவம், பக்குவம், பொறுமை, சாதுர்யம் மூலமாக சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடைசி எபிசோட்வரை இவர் தான் இந்த சட்டவிரோதப் போட்டிகளை நடத்தும் வில்லன் என பார்வையாளர்களுக்கும் கதையின் நாயகனுக்கும் தெரியாது...! இந்த தாத்தா கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மூத்த தென் கொரிய நடிகர் ஓ யோங் சூ, கோல்டன் குளோப் விருது பெற்றார். தென் கொரியாவில் இருந்து கோல்டன் குளோப் விருது பெற்ற ஒரே நடிகர் ஓ-தான்.


latest tamil news


இதேபோல ஹாலிவுட்டில் சா (saw) ஃபிரான்ஸைஸ் திகில் படங்கள் கடந்த 2000-களில் மிகப் பிரபலமாக இருந்தன. இதில் டோபின் பெல் என்கிற 75 வயதான மூத்த ஹாலிவுட் நடிகர், ஜான் கிராமர்/ ஜிக்ஸா கில்லர் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இயந்திரப் பொறியாளரான இவர், தனது வயோதிகத்தில் புற்றுநோயுடன் போராடிக்கொண்டு இருப்பார். வாழ்க்கையின் அருமை தெரியாதவர்களுக்கு வாழ்வின் மகத்துவத்தை வலிமூலம் உணர்த்த, அவர்களைக் கடத்தி உயிரைப் பறிக்கும் போட்டிகளில் பங்கேற்கச் செய்வார். இதில் தோற்கும் போட்டியாளருக்கு ரத்தம் தெறிக்க மரணம் நிச்சயம்.

இதேபோல அவதார் பட சீரீஸ் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற ஸ்டீஃபன் லாங், 'டோன்ட் ஃப்ரீத்' படத்தின் ஆன்டி ஹீரோவாக மிரட்டியிருப்பார். தனது வீட்டில் கொள்ளையடிக்க வரும் மூன்று திருடர்களை படம் முழுக்க இருட்டில் கதறி ஓடவைப்பார். உலகம் முழுக்க உள்ள கதாசிரியர்கள், இயக்குநர்கள் பலர் 70 வயதைக் கடந்த மூத்த நடிகர்கர்களை தங்கள் கதைகளுக்கு வில்லன்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு காரணமும் உள்ளது. குறைந்த வயதுடைய ஓர் நடிகரால் வேகமாக ஓட முடியும், சண்டைக் காட்சிகளில் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் திரைத்துறையில் சிறு வேடங்களில் பல ஆண்டுகளாக நடித்து அனுபவம் மூலம் படிப்படியாக உயர்ந்து 70 வயதை எட்டிய மூத்த நடிகர்கள்போல, வில்லனின் குணாதிசயங்களை இயல்பாக வெளிப்படுத்த முடியாது. இதனாலேயே மெகா பட்ஜெட் ஹாலிவுட் சினிமாக்கள் முதல் ஓடிடி வெப் சீரீஸ் வரை அனைத்து காட்சி ஊடகங்களிலும் மூத்த நடிகர்கள் வில்லன்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X