வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார்:முதல்வர் பங்கேற்ற விழாவில், தாமதமாக வந்த வேலுார் மேயர் சுஜாதாவை முதல்வரின் பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நேற்று மதியம் 12:30 மணிக்கு நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.விழா தொடங்கி சிறிது நேரம் கழித்து தாமதமாக மதியம் 1:00 மணிக்கு வேலுார் மேயர் சுஜாதா விழா மேடைக்கு வந்தார்.
முதல்வரின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். விழா தொடங்கி விட்டதால், தயவு செய்து நீங்கள் போய் விடுங்கள் என்று பாதுகாவலர்கள் கூறினர்.அவர்களிடம் சிறிது நேரம் வாக்கு வாதத்ததில் ஈடுபட்ட மேயர் சுஜாதாவை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். முதல்வர் பங்கேற்கும் விழாவில் ஒரு மேயரை தாமதமாக வரலாமா என தி.மு.க., வினர் குற்றம் சாட்டினர்.