வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டின் முதன்முறையாக வரும் 04-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 73-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு குடியரசாக ஜன.26-ம் தேதி 1950-ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் இரு நாட்களில் 1950ம் ஆண்டு ஜன.28-ம் தேதி உச்சநீதிமன்றம் துவங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 04-ம் தேதியன்று பராம்பரியமிக்க உச்சநீதிமன்றத்தின் 73-வது ஆண்டு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வலியுறுத்தியுள்ளார்.
![]()
|
இதையடுத்து இதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.