காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பற்றிய முழு விபரங்கள் இடம் பெறக்கூடியதாக, https://www.tnurbantree.tn.gov.in/kancheepuram என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.
இந்த இணையதளத்தில், பொதுமக்கள் பார்க்கும் வகையில், மாநகராட்சி தொடர்பான முழு விபரங்கள் இடம் பெற செய்ய வேண்டும்.
ஆனால், மாநகராட்சியின் பல்வேறு விபரங்கள், 'அப்டேட்' செய்யப்படாமலும், புதிய விபரங்கள் ஏதும் பதிவிடாமலும் உள்ளன.
உதாரணமாக, மாதந்தோறும் நடக்கும் மாமன்ற கூட்டத்தின் தீர்மானம் விபரங்கள் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அதன் பின், ஏழு மாதங்களாக இடம் பெறவே இல்லை. முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்தும் எந்த தகவலும் இல்லை.
அதேபோல, மாநகராட்சி பட்ஜெட் விபரம், கடந்த 2020 - 21ம் ஆண்டு வரை மட்டுமே உள்ளது.
இதுபோல, பல்வேறு விபரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் சரிவர இடம் பெறாமல் உள்ளன.
இன்றைய தேதிக்கு பதிவேற்ற வேண்டிய விபரங்களை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக இடம் பெற்றால், பொதுமக்களும் பார்த்து தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என, நகரவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.