மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த, கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் சாந்தப்பன், 64. இவரது மனைவி மேரிபுருனே, 55. கீழச்சேரியில் உள்ள மகளிர் உயர்நிலைப் பள்ளியில் லேப் ஆசிஸ்டென்டாக பணிபுரிந்து வந்தார்.
இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் சாந்தப்பன், அடிக்கடி மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்ற சாந்தப்பன் மனைவியை பள்ளிக்கு வெளியே வரவழைத்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இது குறித்து, மேரி, அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் சாந்தப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.