ஊத்துக்கோட்டை:ஆரணி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி சித்ரா. இவர்களுக்கு நிஷா என்ற மகளும், வினேபா என்ற மகனும் உள்ளனர்.
வினேபா தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். சித்ராவிற்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக அம்பத்துாரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
உடல்நிலை சரியில்லாததால், வினேபா மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வினேபா துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.