வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
திருவாரூர்:டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில்
நாளை ( 03-02-2023) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் மழை காரணமாக 03ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்டகலெக்டர் அறிவித்து உள்ளார்.
Advertisement