திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் உள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு, திருமழிசை ஆழ்வாருக்கு சன்னிதி உள்ளது.
இங்கு, திருமழிசை ஆழ்வார் பிறந்த இடத்தை, குத்தகைக்கு எடுத்த, தி.மு.க., பிரமுகர் ஒருவர், தங்கள் விருப்பம் போல அந்த இடத்தை கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வருகிறார்.
மேலும், திருமழிசை பிறந்த இடம் போதிய பராமரிப்பு இன்றி குடிநீர், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், குப்பை கொட்டும் இடமாகவும், 'குடி'மகன்களின் கூடாரமாகவும் மாறிவிட்டது.
இதை தடுக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருவது பக்தர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ஜெகந்நாத பெருமாள் கோவிலில் திருவிழா நடந்து வரும் வேளையில் கூட ஆழ்வார் பிறந்த இடம், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் அவல நிலையில் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், திருமழிசை ஆழ்வார் பிறந்த இடத்தை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.