பிப்ரவரி 3, 1944
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில், கணேசன் - கனகாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1944ல் இதே நாளில் பிறந்தவர் நாகலிங்கம் என்ற கந்தர்வன்.
அரசு கருவூல கணக்குப் பிரிவில் பணியாற்றிய இவர், கருவூல ஊழியர் சங்க தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் போன்ற பதவிகளை வகித்தார்.
'லா.ச.ரா.,வுடன் ஒரு அழுத்தமான உரையாடல், வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு' போன்ற கட்டுரைகள் வாயிலாக பிரபலமானார். கண்ணதாசன் இதழில், 'கந்தர்வன்'என்ற புனை பெயரில், இவர் எழுதிய இலக்கிய விமர்சனங்கள் பிரபலமடைந்தன.
தொடர்ந்து, முன்னணி இதழ்களில், புழங்கு தமிழில் சிறுகதை, கவிதைகளை எழுதினார். இவரின், 'தண்ணீர், மைதானத்து மரங்கள்' உள்ளிட்ட கதைகள், பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. ஜெயகாந்தனால், 'இலக்கிய சிந்தனை விருது'க்கு தேர்வான இவர், 2004 ஏப்ரல் 22ல், தன், 60வது வயதில் காலமானார்.
நாட்டுடைமை நுால்கள் பட்டியலில், 2022ல் இடம் பெற்றவரின் பிறந்த தினம் இன்று!