நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று நடந்த போட்டியில், 23 வயது வாலிபர், 2.650
கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார்.நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்தவர்களில், குலுக்கல் முறையில் 40 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேற்று மதியம் போட்டி நடந்தது.
இதற்கு நுழைவுக் கட்டணமாக, 99 ரூபாய் வசூலிக்கப்பட்டது. போட்டி துவங்கியதும், அனைவரும் வேகமாக பிரியாணி சாப்பிட்டனர். இனிப்பு, இரண்டு முட்டை, 'லெக் பீஸ்' உடன் பிரியாணி
பரிமாறப்பட்டது.இருபது நிமிடத்தில் யார் அதிகளவு பிரியாணி சாப்பிட்டனரோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இப்போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன், 23, அதிகளவாக, 2.650 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் இடத்தை பிடித்தார்.
இரண்டாம் இடத்தை, 2.350 கிலோ பிரியாணி சாப்பிட்ட ஜீவாவும்; மூன்றாவது இடத்தை, 2.300 கிலோ சாப்பிட்ட கவினும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த சரவணனுக்கு ரொக்கப் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement