- நமது நிருபர் -
தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதி ர்கன்னிகள் உள்ளிட்டோர்,எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து, வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைத்து,திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரது விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து, வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.