பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின், பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும், மாலை, 6:30 முதல், 7:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, 'ஆன்லைன்' பயிற்சியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ரமணி, மாவட்ட தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கினர்.
ஆசிரியர்கள் கீதா, சுகுணாதேவி, கோமதி, ஆனந்த்குமார், ஜவஹர், கல்லுாரி பேராசிரியர் லெனின் பாரதி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் பாதுஷா ஆகியோர் அனைத்து பாடங்களுக்கும் தினமும் பயிற்சி அளிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், 5,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
கடந்த ஆண்டை விட, இந்தாண்டு மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து, அதிகளவில் வெற்றி பெற முயற்சிகள் எடுக்க வேண்டும், என, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். தினமும் கூகுள் மீட் நடக்கிறது.
அதற்கான, மீட்டிங் ஐடி: 527 075 3416 பாஸ்கோடு: tnsf2020 என்ற, 'லிங்க்' வாயிலாக வகுப்பில் இணையலாம். விடுபட்டவர்கள், Tamilnadu Science forum என்ற 'யூடியூப் லிங்க்' வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.