ஆன்மிகம்
பிரதோஷ வழிபாடு
கந்தாஸ்ரமம்: சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி முதல். இடம்: 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்: அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழநி, ஒட்டியம்பாக்கம்.
திருநீலகண்டேஸ்வரர் கோவில்: சிவனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 4:30 மணி முதல். இடம்: கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
மனோன்மணீஸ்வரர் கோவில்: அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
தை வெள்ளி வழிபாடு: குத்துவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: சிவ - விஷ்ணு கோவில், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
சுக்ரவார வழிபாடு: அபிஷேகம் - காலை 5:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
மண்டல பூஜை
கோபால கிருஷ்ணர் சுவாமி கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:30 முதல். இடம்: நடுத்தெரு, காரப்பாக்கம்.
சுமுக விநாயகர் கோவில்: மாலை 4:30 மணி. இடம்: சபாபதி நகர், மூவரசம்பட்டு.
ரேணுகா பரமேஸ்வரி கோவில்: மாலை 4:00 மணி முதல். இடம்: ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை.
காளி பராசக்தி தவசித்தர் பீடம்: மாலை 4:00 மணி முதல். இடம்: முத்துமாரி அம்மன் நகர், திரிசூலம்.
சிவா - விஷ்ணு கோவில்: மாலை 4:00 மணி. இடம்: மறைமலை நகர்.
பக்திப் பாடல்கள்: கீதா கோபாலகிருஷ்ணன் குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
திருமஞ்சனம்: நேரம்: 9:00 மணி. பார்த்தசாரதி பெருமாள் மண்டபத்தில் திருமஞ்சனம். மாலை 5:00 மணிக்கு சுவாமி பெரியவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
பிரஹார விழா: நேரம்: மாலை 4:15 மணிக்கு பிரதோஷம், தை மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
பொது
நுாற்றாண்டு விழா: மாயவரம் எஸ்.வைத்யநாத பாகவதர் நுாற்றாண்டு விழா. பாட்டு: ஞானமுத்ரா இசைப் பள்ளியினர் - மாலை 4:30 மணி. முனைவர் ரேவதி ராமன் எழுதிய - நாவலர் நாராயணன் கீர்த்தனைகள் அடங்கிய இரு நுால்கள் வெளியிடுபவர்: மதுரை ஜி.எஸ்.மணி, 'உருகி பாடினால்' நுால் பெறுபவர்: முனைவர் எம்.ஏ.பாகீரதி. 'சவுந்தர கீர்த்தனைகள்' நுால் பெறுபவர்: கே.எஸ்.ரகுநாதன். சிறப்பு விருந்தினர்: கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன். சிறப்புரை: மிருதங்க வித்வான் எஸ்.ராதாகிருஷ்ணன், மாலை 6:30 மணி. இடம்: தத்வலோகா அரங்கம், சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில், 76, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை.
துவக்க விழா: அவுடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை அலுவலகம் துவக்கி வைப்பவர்: ந.கமலக்கண்ணன், காலை 9:30 மணி. இடம்: வாட்டர் டேங்க் தெரு, அரசன்கழநி, ஒட்டியம்பாக்கம்.
பள்ளி ஆண்டு விழா: தலைமை: ஏ.டி.ஜெயக்குமார், பங்கேற்பு: இ.சந்திரசேகர், நர்மதா செல்வம், பிற்பகல், 3:00 மணி. இடம்: ஏ.ஜே.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளி, ஆலந்துார்.
கண்காட்சி: சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை முதல் மாலை வரை இடம்: வர்த்தக மையகம், நந்தம்பாக்கம்.