திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச தெப்ப உற்சவ விழா, விமரிசையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரொனா தொற்று பாதிப்பு காரணமாக, விழா நடைபெறவில்லை.
கொரோனா தொற்று சரியாகிய நிலையில், இந்தாண்டு, வழக்கம்போல, தைப்பூச தெப்ப உற்சவ விழா, நாளை நடைபெறுகிறது.
விழாவில், இரவு 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி, சரவணபொய்கையில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வருவார்.
இதற்காக, கோவில் சரவணபொய்கை குளத்தில், தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.