மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த எல்.எண்டத்துாரில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், பாண்டுரங்கன் பஜனை மடம் உள்ளது.
சிறிய அளவில் இருந்த இக்கோவில், தற்போது பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
பல்வேறு திருப்பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம், பகவத் அனுக்ஞை, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் துவங்கின.
நேற்று, பிம்பசுத்தி, திருமஞ்சனம், பெருமாள் தாயார் கண் திறப்பு நடந்தது. மாலை மூன்றாம் கால ஹோமம், பூர்ணாஹுதியும், இரவு விசேஷ சயன திருக்கோலமும் நடந்தன.
கும்பாபிஷேக தினமான இன்று, காலை 6:00 மணிக்கு, விஸ்வரூபம், கும்ப ஆராதனம், நான்காம் கால ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.
இன்று காலை 8:30 மணிக்கு கும்ப புறப்பாடும், 9:00 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளன.
தொடர்ந்து, ஆராதனை, மேல்கும்ப புறப்பாடு, சாற்றுமறையை தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
மாலை 5:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை, எல்.எண்டத்துார் கிராம மக்கள் மற்றும் பாண்டுரங்க பஜனை குழுவினர் செய்து வருகின்றனர்.