சித்தாமூர்:சித்தாமூர் அருகே, முகுந்தகிரி கிராமத்தில், 1907ம் ஆண்டு துவக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.
இதில், தற்போது 51 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டடங்கள் பழுதடைந்ததால், தனியார் நிறுவனம் மூலம், 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் மற்றும் சமையலறை சீரமைக்கப்பட்டது.
சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நேற்று துவக்கி வைத்தார்.
துவக்க விழாவில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, செய்யூர் வட்டாட்சியர் பெருமாள் மற்றும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கேற்றனர்.