கருங்குழி:கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 2வது வார்டுக்கு உட்பட்ட, ஆர்.ஆர்., நகர் பகுதியில், கக்கிலப்பேட்டையில் இருந்து, வேடந்தாங்கல் வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையோரம் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, எலும்புக் கூடு போல காட்சி அளிக்கிறது.
சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் முன், அவற்றை உடனடியாக மாற்றித்தர, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.