நீலங்கரை தஞ்சாவூரைச் சேர்ந்த மதன்குமார், 30, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணியில் ஒரு கடையில், டீ மாஸ்டராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சாலையோரம் நின்றிருந்தார். அப்போது, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற, 'செவர்லே' சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து, மதன்குமார், அவருடன் நின்றிருந்த சங்கர் ஆகியோர் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலே மதன்குமார் பலியானார்; சங்கர் காயமடைந்தார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், காரில் இருந்த நான்கு பேரிடம் விசாரித்தபோது, அவர்கள் போதையில் இருந்தனர்.
காரை ஒட்டிய, வேலுார் டி.எஸ்.பி., தங்கவேலு மகன் அன்பரசன், 28, என்பவரிடம், 'பிரீத் அனலைசர்' சோதனை செய்யப்பட்டது. அவர் அருந்திய போதையின் அளவு, 240 மில்லி கிராம் என காட்டியது.
இதையடுத்து அன்பரசன், 28, ஆனந்த், 27, ஹிட்லர், 23, ஞாதேஸ், 27, ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.