உடுமலை:உடுமலையில், கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, பல மாதமாக குடிநீர் வீணாவதோடு, விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
உடுமலை திருமூர்த்தி நகரிலிருந்து, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், மடத்துாரிலிருந்து ஆலாம்பாளையம் செல்லும் ரோட்டில், பிரதான குடிநீர் திட்ட குழாய் உள்ளது.
இக்குழாயில், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.
பல மாதமாக குழாய் உடைப்பு, வீணாகும் குடிநீர் குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மேலும், வீணாகும் குடிநீர் ரோட்டில் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி, விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.