ஓட்டேரி, ன்னை புளியந்தோப்பு, கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா, 35. பெரம்பூர், பேரக்ஸ் சாலையில், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த, ரவுடி மாங்காளி சரத், 27 என்பவர் கஞ்சா போதையில், மேகலாவிடம் 'மாமூல்' கேட்டுள்ளார். பணம் தர மேகலா மறுத்திருக்கிறார். ஆத்திரமடைந்த மாங்காளி சரத், மேகலாவை தாக்கி, காய்கறிகளை சாலையில் வீசியிருக்கிறார். அவர் அணிந்திருந்த, 5 சவரன் தாலி செயினையும் பறித்துச் சென்றார்.
புகாரின்படி இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், நேற்று காலை, மாங்காளி சரத்தை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.