கொடுங்கையூர்,
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 17, கொளத்துார் அரசு விடுதியில் தங்கி, அரசு கலைக் கல்லுாரியில், பி.ஏ., முதலாம் ஆண்டு பயில்கிறார். விடுமுறை நாட்களில், கேட்டரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அந்த வகையில் பழக்கமான, 'வாட்ஸ் ஆப்' நண்பர்கள், நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர், வேளாங்கண்ணி நகர் மைதானம் அருகே, சந்தோஷை வரச் சொல்லியுள்ளனர்.
சந்தோஷ் அங்கு சென்றதும், 'வாட்ஸ் ஆப்' நண்பர்கள் மூவரும் சேர்ந்து, அவரை கட்டை மற்றும் கையால் பலமாக தாக்கி, அவரிடமிருந்து, 5,000 ரூபாய், 'மொபைல் போன்' ஆகியவற்றை பறித்து தப்பினர். கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.