துாத்துக்குடி:துாத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் ஓய்வு பெறும் நிலையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோகன், 60. திருநெல்வேலி மாநகராட்சி உட்பட பல்வேறு நகராட்சிகளில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.
இவர், தன் குடும்பத்தினர் பெயரில், 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாத சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2021 மே மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
ஜன.,31ல் அவர் ஓய்வு பெறும் நிலையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.