தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தால் மக்கள் பாதிப்பு

Added : பிப் 02, 2023 | |
Advertisement
புதர்களை அகற்றணும்உடுமலை - பழநி ரோட்டில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு முன், செடிகள் வளர்ந்து புதர் மண்டிக்காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இந்த செடிகள், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜ்குமார், உடுமலை. ரோட்டில் பள்ளம்தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை


புதர்களை அகற்றணும்



உடுமலை - பழநி ரோட்டில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு முன், செடிகள் வளர்ந்து புதர் மண்டிக்காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இந்த செடிகள், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜ்குமார், உடுமலை.


ரோட்டில் பள்ளம்



தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை ஐஸ்வர்யா நகர் பிரிவு அருகே சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால், வாகனங்களில் செல்வோர் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.

- செல்வராஜ், உடுமலை.


போலீசார் கவனத்துக்கு



உடுமலை பஸ் ஸ்டாண்டுக்குள், விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்கள், கார்கள் சென்று திரும்புகின்றன. இதில், அங்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பஸ்கள் செல்லவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, விதிமீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கார்த்திக், உடுமலை.


கூடுதல் கவுன்டர் தேவை



உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வருகின்றனர். அவர்கள் டிக்கெட் எடுக்கவும், முன்பதிவு செய்யவும் ஒரே ஒரு கவுன்டர் தான் உள்ளது. இதனால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு கூடுதல் கவுன்டர் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுப்பிரமணி, உடுமலை.


ஆக்கிரமிப்புகளை அகற்றணும்



உடுமலை, கல்பனா ரோட்டில், தள்ளுவண்டி கடைகளும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் காணப்படுகின்றன. இதில், வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியினர் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- ரமேஷ், உடுமலை.


பராமரிப்பு இல்லை



உடுமலை, தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பொதுகழிப்பிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், அங்கு பல்வேறு பணிகளுக்கு வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையினர், அங்குள்ள கழிப்பிடத்தை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

- சுப்புராஜ், உடுமலை.


துார்வார வேண்டும்



உடுமலை ராஜேந்திரா ரோடு மேல்நிலைப்பள்ளி அருகில், கழிவுநீர் கால்வாயில் குப்பை, கழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை நகராட்சியினர் துார்வார வேண்டும்.

- மோகன்குமார், உடுமலை.


மேம்பாலம் கட்டணும்



கொழுமம் ரோடு ரயில்வே கேட், ரயில்கள் செல்வதற்காக தினமும் 8 முறை மூடி திறக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு, மேம்பாலம் கட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமசாமி, உடுமலை.


ஆக்கிரமிப்பால் நெரிசல்



உடுமலை அருகே, பெதப்பம்பட்டியில் நால் ரோடு சந்திப்பு உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

- சுந்தரம், உடுமலை.


ரவுண்டானா வேண்டும்



மடத்துக்குளம் நால்ரோட்டில், கொமரலிங்கம், கணியூர் ரோடுகளில், போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கருப்புசாமி, உடுமலை.


தெருவிளக்கு அவசியம்



மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் தெருவிளக்குகள், பிரதிபலிப்பான் இல்லை. இதனால், இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அங்கு தெருவிளக்குகளை மடத்துக்குளம் பேரூராட்சியினர் அமைக்க வேண்டும்.

- தீபக், உடுமலை.


கால்வாயில் குப்பை



உடுமலை அருகே பி.ஏ.பி., வாய்க்கால் கரையில், குப்பை வீசப்படுகின்றன. இதனால், வாய்க்காலில் செல்லும் பாசன நீர் மாசடையும் வாய்ப்புள்ளது. குப்பை கொட்டுவோர் மீது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வக்குமார், உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X