'தொழில் எளிதாக துவங்க முதல் படிக்கட்டு!'

Added : பிப் 02, 2023 | |
Advertisement
திருப்பூர்:பான் கார்டு பொது அடையாள ஆவணமாக மாறுவதால், தொழில் துவங்குவது எளிதாகும் என்கின்றனர் ஆடிட்டர்கள்.தனிநபர் மற்றும் நிறுவனங்களின், நிதிசார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், வருமான வரித்துறையால், பான் கார்டு வழங்கப்படுகிறது. அடையாள ஆவணமாக இல்லாததால், பல்வேறு இடங்களில், ஒரு துணை ஆவணமாக மட்டுமே பான்கார்டு பயன் படுத்தப்பட்டு வருகிறது.2023 - 24ம் ஆண்டுக்கான மத்திய

திருப்பூர்:பான் கார்டு பொது அடையாள ஆவணமாக மாறுவதால், தொழில் துவங்குவது எளிதாகும் என்கின்றனர் ஆடிட்டர்கள்.

தனிநபர் மற்றும் நிறுவனங்களின், நிதிசார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், வருமான வரித்துறையால், பான் கார்டு வழங்கப்படுகிறது. அடையாள ஆவணமாக இல்லாததால், பல்வேறு இடங்களில், ஒரு துணை ஆவணமாக மட்டுமே பான்கார்டு பயன் படுத்தப்பட்டு வருகிறது.

2023 - 24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பொது அடையாள ஆவணமாக பான்கார்டு பயன்படுத்தப்படும் என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால், தொழில் துவங்குவது எளிதாகும் சூழல் உருவாகிறது.

திருப்பூர் ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:

தனிநபருக்கு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு போதுமானது. ஆனால், தொழில் நிறுவனங்கள், பான் எண், டி.டி.எஸ்., பிடித்தத்துக்காக டேன் எண், பி.எப்., - இ.எஸ்.ஐ., - தொழிற்சாலை பதிவு, கம்பெனி பதிவுக்கு சின் எண், மாசுகட்டுப்பாடு வாரிய பதிவு, ஏற்றுமதி - இறக்குமதியில் ஈடுபட்டால் டி.ஜி.எப்.டி., பதிவு என, பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு கணக்கு எண்களை பெறவேண்டியுள்ளது. எளியமுறையில் தொழில் செய்தலுக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய தடைக்கலாகவே இருந்துவருகிறது.

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவருகிறது; இதுபோன்று, அரசு சார்ந்த வெவ்வேறு வகை கணக்கு எண்களை பெற்று, அதன்பின், பான் எண் இணைக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி., எண்ணுடன் மட்டுமே, பான் எண், நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது; ஒரு நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., எண்ணைவைத்து, அந்நிறுவனத்தின் பான் எண்ணை தெரிந்துகொள்ளமுடியும்.

பான் கார்டை பொது ஆவணமாக மாற்றும் நிதி அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால், உடனடியாக எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடாது. ஆனால், எளியமுறை தொழில் துவங்குதல், தொழில் செய்வதற்கு இந்த அறிவிப்பு முதல் படிக்கட்டாக அமையும்.

எதிர்காலத்தில், தொழில் நிறுவனங்கள், அரசு துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் எண்ணை பயன்படுத்தும் வகையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது.

'ஒரு நிறுவனம், ஒரே எண்' என்கிற நிலை உருவாவதன்மூலம், தொழில் துவங்குவது எளிதாகும். அதேபோல், தனிநபர், நிறுவனங்களின் நிதி சார் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசுக்கு மேலும் எளிதாகும்; வரி ஏய்ப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X