கோவை:சென்னையில் நடந்து வரும் மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட் தொடரில், கோவை ராமகிருஷ்ணா அணி அபாரமாக விளையாடி, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றது.
சென்னை எச்.ஆர்.கிரிக்கெட் அகாடமி சார்பில், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி கேளம்பாக்கம் சி.எஸ்.கே., அகாடமி மைதானத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெண்கள் அகாடமி அணிகள் லீக் முறைப்படி போட்டியிடுகின்றன.
இப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்றுள்ள, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளையின் பெண்கள் அணி, முதல் போட்டியில் எச்.ஆர்.கிரிக்கெட் அகாடமி அணியையும்; இரண்டாவது போட்டியில்லைப் ஸ்போர்ட்ஸ் அணியையும்; மூன்றாவது போட்டியில் சி.எஸ்.கே. அகாடமி அணியையும்; நான்காவது போட்டியில் ஸ்போர்ட்ஸ் யூனிவர்சிட்டி அணியையும் வீழ்த்தியது.
வெற்றி வீராங்கனைகளை, பயிற்சியாளர் குருசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்தினர்.