சென்னை:பிரதமரின் விவசாய உதவித் தொகை பெறும் திட்டத்தில், 'ஆதார்' எண் இணைக்க, மார்ச் 30 வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில், மூன்று தவணைகளில் வரவு வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது, 24.6 லட்சம் பேர் மட்டுமே, பிரதமரின் விவசாய உதவித் தொகை பெற தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவர்களில், 18.6 லட்சம் பேருக்கு மட்டுமே விரைவில், 13வது தவணை நிதி வழங்கப்பட உள்ளது. பல்வேறு காரணங்களை கூறி, மீதமுள்ளோருக்கு நிதி மறுக்கப்படுகிறது.
அதில், 3.20 லட்சம் பேர் தங்கள் ஆதார் எண்ணை, திட்ட இணையதளத்தில் இணைக்காமல் உள்ளனர். பயனாளிகள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றால் மார்ச் 30க்குள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.