ஈரோடு:இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவத்தினர், 400 பேர் ஈரோடு செல்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், 27ல் நடக்கிறது. ஓட்டளிக்க வசதியாக 238, ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 32 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட உள்ளது.
மேலும் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மட்டுமின்றி, ஐந்து குழுக்களைச் சேர்ந்த, துணை ராணுவத்தினர் 400 பேர், 20ம் தேதி ஈரோடு செல்கின்றனர்.
ஓட்டுப்பதிவு முதல் ஓட்டு எண்ணிக்கை வரை, இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என, மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.