நேற்று பொள்ளாச்சி செல்லும் வழியில், திருப்பூர் மாவட்டம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாராபுரத்துக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு சென்றார்.
போலீஸ் ஸ்டேஷன் வளாகம், டி.எஸ்.பி., வளாகத்தை சுற்றி பார்வையிட்ட டி.ஜி.பி., ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டார். அதில், ஸ்டேஷன் கோப்புகளை முறையாக பராமரித்து வந்த, ஏட்டு முகமது ஆசாத்தை பாராட்டி வெகுமதி வழங்கினார். தொடர்ந்து, 254 'சிசிடிவி' கேமரா கொண்ட கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். சிறப்பான பணிக்காக போலீஸ் அதிகாரிகளை பாராட்டிய அவர், போலீஸ் குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்டு, போலீசாரின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக, டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். ஆய்வின் போது, எஸ்.பி., சஷாங் சாய், டி.எஸ்.பி., போலீசார் உடனிருந்தனர்.