லண்டன்: பிரிட்டனில் உள்ள அதானி குழும நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரர் ஜோ ஜான்சன் விலகினார்.
பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் அதானி குழுமத்தின் கீழ் அதானி எண்டர் பிரசைஸ் முதலீட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக , ஜோ ஜான்சன் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரர் ஆவார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் இப்பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement