ஜமுனாமரத்துார்:வேலுாரில் இருந்து அமிர்திக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அரசு பஸ்சில், கண்டக்டராக பாரதிராஜா, 42, பணியில் இருந்தார்.
அந்த பஸ்சில், வேலுார் மாவட்டம், சாத்துமதுரையைச் சேர்ந்த அரவிந்த், 24, வேலுமணி, 41, வேலுார் கொசப்பேட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் வேலப்பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 30, ஆகியோர் மது போதையில் ஏறினர்.
அவர்கள் ரகளையில் ஈடுபட்டதால், கண்டக்டர் பாரதிராஜா, அவர்களை பாதி வழியில் பஸ்சிலிருந்து இறக்கி விட்டு சென்றார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், செல்லும் வழியில், ஒரு காரை எடுத்துக்கொண்டு, பஸ்சை பின் தொடர்ந்து சென்று, அமிர்தி அருகே பஸ்சை மறித்தனர்.
கண்டக்டர் பாரதிராஜாவை காரில் கடத்திச் சென்று, வழியில் இறக்கி விட்டு தப்பினர்.
ஜமுனாமரத்துார் போலீசார், அரவிந்த், வேலுமணி, சத்தியமூர்த்தி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.