இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரவிந்த் பனகாரியா கணிப்பு

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: இந்தியா, 2027 - 28 நிதியாண்டில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என, 'நிடி ஆயோக்'கின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார அறிஞருமான அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:இந்தியா உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. தற்போது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், 2027 - 28ல் மூன்றாவது பெரிய
இந்தியா , வளர்ச்சி குறித்து  அரவிந்த்  ,பனகாரியா

புதுடில்லி: இந்தியா, 2027 - 28 நிதியாண்டில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என, 'நிடி ஆயோக்'கின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார

அறிஞருமான அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்.



இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:இந்தியா உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. தற்போது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், 2027 - 28ல் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்வை காணும் என கருதுகிறேன்.பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியா 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என தெரிவித்திருந்தாலும், அறிக்கையில் மேலும் வளர்ச்சியை காண்பதற்கான அம்சங்கள் நிறைய இருப்பதை

காண்கிறேன்.


latest tamil news


இந்தியா மீண்டும் 7 சதவீத வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என கருதுகிறேன். இந்தியாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு, பொருளாதார பலகீனங்கள் களையப்பட்டு உள்ளன. குறிப்பாக, வங்கிகளின் வாராக் கடன்கள் குறைந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவன செயல்பாடுகள் நன்றாக உள்ளன. இது முதலீடுகளில் பிரதிபலிக்கிறது.

பல பெரிய கார்ப்பரேட்டுகள் முதலீடுகளை மேற்கொண்டு வருவதை காண்கிறோம்.இந்த அரசு தன்னுடையபலத்தை உணர்ந்துள்ளது. கடைசி முழு பட்ஜெட் என்றாலும் கூட,
அதை ஜனரஞ்சகமான பட்ஜெட்டாக நீங்கள் காணாததற்கு இதுவே காரணம் என்று நான் நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

Srprd -  ( Posted via: Dinamalar Android App )
03-பிப்-202313:53:04 IST Report Abuse
Srprd இவர் பதவியில் இருந்து ஏன் விலகினார் ? அரசுடன் கருத்து வேறுபாடா ?
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
03-பிப்-202313:53:02 IST Report Abuse
Srprd இவர் பதவியில் இருந்து ஏன் விலகினார் ? அரசுடன் கருத்து வேறுபாடா ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-பிப்-202308:15:33 IST Report Abuse
raja உயரட்டும்.. ஆனால் அயல்நாடுகளில் வேளை என்று கை பேசியில் அழைத்து உடனே ரூபா 25000 gpay பண்புகள் என்று ஏமாற்றும் கும்பல் அதிகமாயிற்று வருது... எனக்கே போன் செய்து காசு கொடுங்கன்னு கேக்கிரானுவோ... மத்திய மாநில அரசுகள் இதில் தீவிர கண்காணிப்பில் இல்லையா அல்லது இதில் பங்கு போகிறதா என்று தெரிய வில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X