''அதிகாரிகள் தகவல் ஒண்ணு இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவிடம், ''சீக்கிரம் சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''வார இறுதி நாட்கள்ல, விவசாயிகளை அவா இடத்துக்கே தேடிப் போய் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் சந்திக்கணும்... அப்ப, வேளாண் சாகுபடியை அதிகரிக்க ஆலோசனைகள் தரணும் ஓய்...
''ஆனா, இப்ப கொஞ்ச நாளா விவசாயிகளை யாரும் தேடி போய் பார்க்கறதே இல்லை... சென்னையில இருந்து வேளாண்மை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடத்தற, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்கள்ல பங்கேற்கவே, அதிக நேரத்தை மாவட்ட அதிகாரிகள் செலவிடறா ஓய்...
![]()
|
''அதே மாதிரி, மத்திய வேளாண் துறை சார்புலயும், அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களை நடத்தறா... அதுலயும் மாவட்ட அதிகாரிகள் கலந்துக்கறா ஓய்...
''இதனால, வேளாண் துறை ஆபீசுக்கு வர்ற விவசாயிகளையும் அதிகாரிகள் சந்திக்கறது இல்லை... 'நம்மையும் தேடி வர மாட்டேங்கறா... நாம வந்தாலும், பார்க்க முடியறது இல்லையே'ன்னு விவசாயிகள் தரப்பு புலம்பறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.