திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியக பணியில் பெயின்டிங் மற்றும் தச்சு வேலை தாமதம் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு பொருட்களை காட்சிப்படுத்த பொதுப்பணித்துறை சார்பில் தச்சுப்பணி, பெயின்டிங் பணி நடக்கிறது.
இப்பணிகள் தாமதம் ஆவதால் காட்சிப்படுத்தும் பணியும் தொய்வடைந்துள்ளது. மண்பாண்ட பொருட்கள், உலோக பொருட்கள், எலும்பு பொருட்கள், அழகுசாதன பொருட்கள், வேளாண் பொருட்கள் என தனித்தனி கூடம் அமைக்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு கூடத்திலும் பொருட்களுக்கு தனித்தனியாக மரதடுப்புகள், மேடை அமைக்கப்படுகின்றன.
பொருட்களுக்காக ஆறு கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றில் மட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. மற்றவற்றில் மரத்தடுப்புகள், மேடை பணிகள் நிறைவடைந்த பின் பொருட்கள் வைக்கப்படும். இதனால் திறப்புவிழா தாமதம் ஆகும் வாய்ப்புள்ளது.