வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா - ஆஸி., மோதும் கடைசி டெஸ்ட் போட்டியை, இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானெசே நேரில் காண உள்ளனர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப். 9 முதல் மார்ச் 13 வரை) பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் பிப். 9-13ல் நாக்பூரில் நடக்கவுள்ளது. அடுத்த மூன்று போட்டிகள் டில்லி (பிப். 17-21), தர்மசாலா (மார்ச் 1-5), ஆமதாபாத்தில் (மார்ச் 9-13) நடக்கவுள்ளன.
நான்காவது, கடைசி டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் மார்ச் 9-13ல் நடக்கவுள்ளது. இப்போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானெசே வரவுள்ளனர். மைதானம் மறு சீரமைக்கப்பட்டு மோடி பெயர் வைக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் நிகழ்வாக இது அமையவுள்ளது.
![]()
|
ஜடேஜாவுக்கு அனுமதி
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான களமிறங்கும் இந்திய 'லெவன்' அணியில் சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா இடம் பெறவுள்ளார். முழங்கால் ஆப்பரேஷனில் இருந்து மீண்ட இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த ரஞ்சி போட்டியில் தமிழகத்துக்கு எதிராக 8 விக்கெட் சாய்த்தார். இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி வழங்கியது.