சென்னை : மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' உத்தரவை அமல்படுத்தும் வகையில், தனியார் சேனல்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தி உள்ளன. இதனால், அரசு கேபிள் 'டிவி' கட்டணம், மார்ச் முதல் உயரும் என, 'ஆப்பரேட்டர்'கள் தெரிவித்தனர்.
அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது: டிராயின் புதிய கட்டண ஆணைகள், ஒரே நேரத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி, சேனல் நிறுவனங்கள், 30 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளன. ஆனால், கேபிள் ஒளிபரப்பு நிறுவனங்கள், பிப்ரவரி கட்டணத்தை உயர்த்தவில்லை.
அரசு கேபிள், 'டிவி'யும் உயர்த்தவில்லை. ஆனால் இது, மார்ச் முதல் உயர வாய்ப்பு உள்ளது. தற்போது, 100 இலவச சேனல்களுக்கு, 130 ரூபாய் கட்டணம், ஜி.எஸ்.டி., சேர்த்து, 155 ரூபாய், அரசு கேபிள், 'டிவி'யில் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.