வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத், 45; பனியன் தொழிலாளி. கடந்த, 29ம் தேதி இரவு, 8:00 மணியளவில் டியூசனுக்கு சென்ற மகளை அழைத்து வர, நியூ திருப்பூரில் இருந்து பொங்குபாளையத்துக்கு இவர் டூவீலரில் சென்றார்.
அப்போது, பரமசிவம்பாளையத்தில் ரோட்டில் நடந்து சென்ற வடமாநில வாலிபர் மீது வாகனம் மோதியது. இதில், வாலிபரின் மொபைல் போன் சேதமானது. இருதரப்பு பேச்சுக்கு பின், வடமாநில வாலிபருக்கு, 500 ரூபாயை சம்பத் கொடுத்து சென்றார்.
இச்சூழலில், வடமாநில வாலிபர் டூவீலர் மீது ஏறி அமர்ந்து டூவீலரை தர மறுப்பது, அந்த நபரிடம் சம்பத் டூவீலரை தர வலியுறுத்துவது போன்ற காட்சிகளுடன், வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஏற்கனவே கடந்த மாதம் வடமாநில வாலிபர்கள் விரட்டும் வீடியோ பூதாகரமானது. இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
![]()
|
'டூவீலரை பறித்து அட்டகாசம்; தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல்' என, தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த வதந்தியை நம்ப வேண்டாம்; பொய்யானது. வதந்தியை பரப்பிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
Advertisement