சிவராத்திரியை கொண்டாட 5 கோவில்களுக்கு தனி குழு

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஐந்து சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட, கண்காணிப்புக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா, பிப்., 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அறநிலையத் துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர்,
temple,Shivaratri,Hindu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஐந்து சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட, கண்காணிப்புக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.


இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா, பிப்., 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அறநிலையத் துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களில், மகா சிவராத்திரி விழா, வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது.


விழாவை சிறப்பாக நடத்த, கோவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, ஐந்து கோவில்களுக்கும் தலா, மூன்று சிறப்பு அலுவலர்கள் இடம்பெற்ற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news

குழுவில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்து அதிகாரிகள் உள்ளனர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள், பிப்., 17, 18ம் தேதி, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று, சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டுஉள்ளார்.


விழாவை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு மதிப்பெண்கள் வழங்க, ஒவ்வொரு கோவிலுக்கும் தலா, மூன்று அலுவலர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவிலும், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் இடம் பெற்றுள்ளனர்.


இக்குழுவினர், பிப்., 18ம் தேதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களுக்கு சென்று, விழாவை கவனித்து, மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த அறிக்கையை, கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

g.s,rajan - chennai ,இந்தியா
03-பிப்-202320:46:29 IST Report Abuse
g.s,rajan தமிழகத்தில் திட்டம் போட்டுக் கோயில்களைக் கொள்ளை அடிக்கிறார்கள் ,அந்தக் கடவுளுக்கே பொறுக்காது .
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
03-பிப்-202316:19:07 IST Report Abuse
தமிழ்வேள் ஒருக்கால் அல்லேலூயா கும்பலை நுழைத்து , சிவராத்திரி என்பது "ஏசு-ராத்திரி" என்று கிளபபிவிட திட்டம் ஏதாவது தயாராகி உள்ளதா ? திருட்டு திமுக எதை செய்தாலும் , அது வில்லங்கத்தில்தான் முடியும் ..கட்டுமரம் கற்பித்த வழிமுறை அப்படி ..
Rate this:
sridhar - Chennai,இந்தியா
03-பிப்-202318:34:26 IST Report Abuse
sridharமத சார்பற்ற சிவ ராத்திரி . பர்வீன் பானு , சுகி சிவம் எல்லாம் நமக்கு துர்போதனை செய்வார்கள் . திமுகவுக்கு வோட்டு போட்ட ஹிந்துக்களுக்கு நரகம் தான்....
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
03-பிப்-202315:04:35 IST Report Abuse
Oru Indiyan கடவுளுக்கே மதிப்பெண்களா?☺️☺️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X