மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கடந்த 1997 ல் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட13 பேர், தண்டனை காலம் முடியும் முன்னரே கடந்த 2010ல் தமிழக அரசு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
அனைத்து கோணங்களிலும் பரிசீலனை செய்து 13 பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.