வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தததை அடுத்து போலீசார் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ராமர் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. 'அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளில், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்தாண்டு மகர சங்கராந்தியின் போது, கோவில் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்கு தயாராகி விடும்,
இந்நிலையில் மிரட்டல் வந்துள்ளது குறித்து ராமஜென்மபூமி பகுதி போலீஸ் ஸடேஷன் அதிகாரி சஞ்சீவ்குமார்சிங் கூறியதாவது: அயோத்தியில் வசிக்கும் ஒருவரது வீட்டிற்கு தொலைபேசி வந்துள்ளது. ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும் இந்த போனை தொடர்ந்து அயோத்தி சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்துக்கு உத்தரவிட்டுள்ளோம். என்றார்.

அயோத்தியில் ராமர், சீதை சிலை வடிவமைக்க நேபாளத்தில் இருந்து பல ஆயிரம் கிலோ எடை கொண்ட 2 புனித கற்கள் நேற்று வந்து சேர்ந்தது. இதனை பக்தர்கள் பலரும் வணங்கி சென்றனர். இந்நிலையில் வந்துள்ள மிரட்டல் அயோத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.