சென்னை: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் அளித்த பேட்டி: வட மாநிலங்களில் பாஜ.,வின் செயல்பாடுகளை கவனித்துள்ளோம். நட்பு ஆட்சிகள் எப்படி கவிழ்ந்தது. அந்த ஆட்சியை எப்படி பா.ஜ., பிடித்தது அனைவருக்கும் தெரியும்.
நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். பன்னீர்செல்வம், பழனிசாமியை இணைக்க முயற்சி நடக்கவில்லை. பன்னீர்செல்வத்திற்கு கட்சியே இல்லை. அவர் செல்லாக்காசு. பழனிசாமியை தலைமையை விரும்புகின்றனர். பா.ஜ.,வும் விரும்பலாம். தி.மு.க.,வை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் கூட்டணிக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.